விசாரணைக்குழு அமைக்கப்படுமானால் த.தே.கூ. வின் ஆலோசனை பெறப்பட வேண்டும்: சுரேஷ்
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக சர்வதேச விசாரணையொன்று கொண்டு வரப்படுமானால் அப்பொறி முறையினூடான விசாரணை சிறப்புடையதாக அமையும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
அவரிடம் ஜெனிவா மாநாடு பற்றி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் இன்னுமொரு பொறிமுறை பற்றியும் கூறப்படுகிறது. ஆனால் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்படுமானால் அதுவே கனதியாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைப்பேரவையினால் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்படும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆலோசனை பெறப்பட வேண்டுமென நாம் விரும்புகின்றோம். அவ்வாறு பெறப்படுமானால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை நிறைவேற்ற கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.
இலங்கைத்கெதிரான சர்வதேச விசாரணையென்ற விவகாரத்துக்குள் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னென்ன என்பது பற்றி நாம் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். சர்வதேச விசாரணையென்பதற்கு மேலாக இன்று வட கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் அத்துடன் சர்வதேச மத்தியஸ்தத்தினூடாக அரசியல் தீர்வு என்ற பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டியது முக்கியமானதும் அவசியமானதுமாகும். இவ்விடயத்தை செய்து முடிப்பதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குத்தான் பெரிய பங்குண்டு. வேறு எவருமே இது பற்றிக் கதைக்க வாய்ப்பில்லை கதைக்கவும் மாட்டார்கள்.
எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது இவ்விடயம் சம்பந்தமாக ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். ஏன்எனில் நடைபெறப் போகின்ற ஜ.நா மனித உரிமைப் பேரவையினால் எப்படியான விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். அந்த குழு என்னென்ன விடயங்களை உள்ளடக்கி விசாரணை செய்ய வேண்டும் பேச வேண்டும் என்பதை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே தீர்மானிக்க முடியும்.
துரதிஷ்ட வசமாக மிக நீண்ட காலத்துக்குப் பின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த விடயம் தொடர்பில் கலந்துரையடியது.
உண்மையில் இவ்விடயம் குறித்து நாம் எப்பொழுதோ கூடி பேசித்தீர்மானித்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
விசாரணைக்குழு அமைக்கப்படுமானால் த.தே.கூ. வின் ஆலோசனை பெறப்பட வேண்டும்: சுரேஷ்
Reviewed by NEWMANNAR
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment