கிளிநொச்சியில் கடும் வரட்சி. குடிநீருக்குத் தட்டுப்பாடு.
பருவ மழை சீரின்மையால் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பல இடங்களில் நீர்
நிலைகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது .
இதேவேளை கிளிநொச்சி நகர் பகுதியில் கடும் வரட்சி நிலவுவதால் குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் . இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிணறுகளில் பொதுவாக நீர் மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர் .
கிளிநொச்சி நகரில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குளாய் மூலமான குடிநீர் விநியோகத்தினை மீண்டும் இப்பகுதியில் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதேவேளை யுத்தத்தின்போது அழிக்கப்பட்டுள்ள பரந்தன் , கிளிநொச்சி தண்ணீர் தாங்கிகளையமீளவும் அமைக்கவேண்டுமெனவும் இப்பிரதேச மக்கள் கோருகின்றனர் . கிளிநொச்சியில் இம்முறை ஏற்பட்டுள்ள வரட்சி தொடருமாயின் எதிர்காலத்தில் இப்பகுதியில் குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் எனவும் இப்பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது .
கிளிநொச்சியில் கடும் வரட்சி. குடிநீருக்குத் தட்டுப்பாடு.
Reviewed by NEWMANNAR
on
February 15, 2014
Rating:
No comments:
Post a Comment