வட மாகாணசபையை கலைக்கும் திட்டமில்லை – அரசாங்கம்:-
வட மாகாணசபையை கலைக்கும் திட்டம் எதுவுமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வட மாகாணசபையில் அண்மையில் சர்ச்சைக்குரிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணசபை உள்ளிட்ட சகல சவால்களையும் அரசாங்கம் எதிர்நோக்க வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வட மாகாணசபையை நிறுவியமை பிழையான தீர்மானம் என சில தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், எனினும் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் வடக்கு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசiயை கலைக்குமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணசபையை கலைக்கும் திட்டமில்லை – அரசாங்கம்:-
Reviewed by NEWMANNAR
on
February 02, 2014
Rating:

No comments:
Post a Comment