இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடந்த 31 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டு வருகின்றனர். சிறைப்பிடிக்கப்படுவதுடன் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அவர்களின் வாழ்வாதாரமிக்க பொருட்களையும் இலங்கை படையினர் சேதப்படுத்தி விடுகின்றனர்.
இந்த அத்துமீறல்களை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment