அண்மைய செய்திகள்

recent
-

சென்னையில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு நாம் தமிழர் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

இதில் வன்முறை வெடித்ததில் பலர் காயம் அடைந்தனர். பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவன், ராயப்பேட்டை, அண்ணா சாலையில் பதற்றமான நிலை காணப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய பிரச்சினை மாலை 4 மணி வரை நீடித்தது.

இந்நிலையில், சென்னையில் சில இடங்களில் ராஜீவ் காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது. வேப்பேரி காவல் நிலையம் அருகே ராஜீவ் காந்தி மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் முகத்தை மர்ம நபர்கள் உடைத்து விட்டனர்.

உடைந்த பாகங்கள் சிலை அருகிலேயே கிடந்தன. இதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர், சிலை முன்பு வியாழக்கிழமை காலை கூடினர். பின்னர் ஈ.வி.கே.சம்பத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேப்பேரி பொலிஸார் சமாதானப்படுத்தியதால் மறியலை கைவிட்டனர்.

இதேவேளை, பெரம்பூர் பேரக்ஸ் வீதியில் புரசைவாக்கம், பட்டாளம் ஆகிய 2 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உள்ளன. இந்த சிலைகளின் தலைகளை மர்ம நபர்கள் கம்பியால் அடித்து உடைத்துள்ளனர். இதையடுத்து, பட்டாளம் அருகிலும் காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்தனர். காலை 9 மணிக்கு நடந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பெரம்பூர் பொலிஸார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.



சென்னையில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைப்பு Reviewed by NEWMANNAR on February 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.