78 ஆக உயர்ந்துள்ள திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி 30வது தடவையாக இன்று ஞாயிற்றுக்கிழமை அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதன்போது புதிதாக இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில்; இன்று ஞாயிற்றுக்கிழமை (23.02.2014) 30வது தடவையாக அகழ்வு செய்யும் பணிகள் காலை 8:30 முதல் பிற்பகல் 1:30 மணிவரை குறித்த மனித புதைகுழியில்; நடைபெற்றது.
இதன்போது குறித்த புதை குழியில் புதிதாக இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது
இன்றைய அகழ்வின்போது சட்டவைத்திய நிபுணர் டி.எல்.வைத்திரெட்ண தலைமையிலாக குழு சமூகமளிக்கவில்லை இதனை அடுத்து தொல்பொருள் ஆராட்சி நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த பணிகள் நடைபெற்றன.
நேற்று புதைகுழியில் 50 சென்ரி மீற்றர் ஆழத்திற்கு புதைகுழி அகழ்வு வேலைக்கென ஆழமாக்கும் வேலைகள் நடைபெற்றது.
நேற்று 29வது தடவையாக குறித்த மனித புதைகுழி அகழ்வு செய்யப்பட்டபோது இரண்டு எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலத்தடியில் குழாய்கள் பதிக்;கும் வேலைகள் நடைபெற்றவேளை மனிதஎச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த மாதம் 23 ந் திகதியிலிருந்து இவ் மனிதபுதை குழி அகழ்வுவேலை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை (22.02.2014) வரை 76 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன
இன்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
இது வரையில் புதை குழியிலிருந்து மொத்தமாக 69 எலும்புக்கூடுகள் பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டு மன்னார் பொது வைத்திய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில்; தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் உட்பட பொலிசார் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரும் இணைந்து இவ் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை நாளை திங்கள்கிழமை குறித்த மனிதபுதைகுழி 31வது தடவையாக அகழ்வுசெய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 23, 2014
Rating:
Reviewed by Author
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment