அண்மைய செய்திகள்

recent
-

80 ஆக உயர்ந்துள்ள திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி 31வது தடவையாக இன்று  திங்கள்கிழமை அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதன்போது புதிதாக இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில்; இன்று திங்கள்கிழமை (24.02.2014) 31 வது தடவையாக அகழ்வு செய்யும் பணிகள் காலை 8:30 மணிமுதல் பிற்பகல் 3:30 மணிவரை குறித்த மனித புதைகுழி அகழ்வு நடைபெற்றது.

இதன்போது குறித்த புதை குழியில் புதிதாக இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை புதை குழியிலிருந்து பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 30 வது தடவையாக  புதைகுழி அகழ்வு செய்யப்பட்டபோது மொத்தமாக 78 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 69 பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டிருந்தது.

இன்நிலையில் இன்று இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இரண்டும் பகுப்பாய்விற்கென இன்று குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதோடு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 9 பெட்டிகளில் பொதிசெய்யப்பட்டு பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இன்று 11 எலும்புக்கூடுகள் பொதிசெய்யப்பட்டு பெட்டிகளில் பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து புதைகுழியிலிருந்து பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.


இன்றைய அகழ்வின்போது சட்டவைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவின் பங்குபற்றுதலுடன் தொல்பொருள் ஆராட்சி அதிகாரிகள்,பொலிசார் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் இணைந்து  குறித்த பணிகளில் ஈடுபட்டனர்.

இதன்போது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தடயபொருட்களை நீதிமன்றில் ஒப்படைக்கும்படி மன்னார்மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடயபொருட்களாக தாயத்து,நாணய குற்றி,மோதிரம் மற்றும் வாகனத்தின் கண்ணாடி துண்டு என்பனவற்றை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்தடிசம்பர் மாதம் 20 ந் திகதி திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலத்தடியில் குழாய்கள் பதிக்;கும் வேலைகள் நடைபெற்றவேளை மனிதஎச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
    இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த மாதம் 23 ந் திகதியிலிருந்து இவ் மனிதபுதை குழி அகழ்வுவேலை  தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.02.2014) வரை 78 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன

இன்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
இது வரையில் புதை குழியிலிருந்த மொத்தமாக 80 எலும்புக்கூடுகள் பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

இதேவேளை மேலும் மனித எச்சங்கள் குறித்த புதை குழியிலிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது  இந்நிலையில்

 திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறவுள்ள சிவராத்திரி தினத்தை ஒட்டி மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணிகள் இன்றுடன் இடைநிறுத்தப்பட்டு மீண்டும்
 எதிர்வரும்  புதன்கிழமை 5ம் (05.03.2014) திகதி குறித்த மனிதபுதைகுழி  32 வது தடவையாக அகழ்வுசெய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.









80 ஆக உயர்ந்துள்ள திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை Reviewed by Author on February 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.