அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் குடும்பங்களுக்கு லண்டன் அகிலன் பவுண்டேசன் வாழ்வாதார உதவி - படங்கள்

லண்டன் அகிலன் பவுண்டேசன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு வாழ்வாதார உதவிகளை வழங்கி வருவதுடன், பயிற்சி திட்டங்களையும் உள்ளூர் கிராம அமைப்புக்களுடன் இணைந்து நடாத்தி வருகின்றது.

அகிலன் பவுண்டேசனின் நிறுவுனரான கோபாலகிருஸ்ணன் நேரடியாக வந்து அடிக்கடி மக்களை பார்வையிட்டு தேவைகளை அறிந்து உதவி வருகின்றார். அதனடிப்படையில் மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசப் ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க இருபது போரினால் பாதிக்கப்பட்ட பயளாளிகளுக்கு பல்வேறு நலன்கருதி பதினெட்டு இலட்சம் ரூபா பெறுமதியில் உதவிகள் வழங்கபட்டுள்ளன.

இவை ஆடு, மாடு, கோழி வளர்த்தல், வியாபாரம் ஆரம்பித்தல், முச்சக்கரவண்டி, துவிச்சக்கர வண்டி திருத்துதல் போன்ற பயனுள்ள வாழ்வாதார மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை வழங்கும் நிகழ்வு அண்மையில் மன்னாரில் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை, அருட் தந்தை விக்டர், அருட் சகோதரிகள், அகிலன் பவுண்டேசனின் இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட பயளாளிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்து கருத்துரைத்த மன்னார் ஆயர்,

யுத்தகாலத்தில் நேரடியாக தாங்கள் அனுபவித்த துன்பத்தினை விளக்கி கூறியதுடன், அவ்வேளையில் கைவிடப்பட்ட பல வயோதிபர்களை நேரடியாக தங்களது பொறுப்பில் வைத்து பராமரித்து அவர்களது இறுதிக் கிரியையும் தாங்களே செய்ததாகவும் கூறியதுடன், தமிழர்களாகிய நாங்கள் கிடைக்கும் உதவிகளையும், வழங்களையும் வைத்து வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் எனவும் இங்கு வந்திருக்கின்ற அனைவரும் இவ் உதவியினூடாக முன்னேற்றம் அடைவதுடன், திரு.மு.கோபாலகிருஸ்ணன் அவர்களுக்கும் அகிலன் பவுண்டேசன் அமைப்பிற்கும் நன்றியுடையவராக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.






மன்னார் குடும்பங்களுக்கு லண்டன் அகிலன் பவுண்டேசன் வாழ்வாதார உதவி - படங்கள் Reviewed by NEWMANNAR on March 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.