இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: கிரேக்கம், ஜேர்மன் மற்றும் கனடா அதிருப்தி-காணொளி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய கூட்டத்தின் போது இலங்கை தொடர்பில் சில நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
கிரேக்கப் பிரதிநிதி
“சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற அனைத்து வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்தினால் இயலாமல் போயுள்ளது. அது குறித்து நாம் கவலையடைகின்றோம். அந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. ஆணையாளர் கோரியுள்ள சர்வதேச விசாரணைக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.”
ஜேர்மன் பிரதிநிதி
“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாம் மீண்டும் அதிருப்தியை வெளியிடுகின்றோம். மிகுந்த கவலையும் கொண்டுள்ளோம். மனித உரிமைகளின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன், இலங்கையில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.”
கனேடியப் பிரதிநிதி
“இலங்கையில் ஊடகவியலாளர்கள், சட்டவல்லுனர்கள் மீதான அழுத்தங்கள் அதேபோன்று சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் நாம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். இவ்விடயங்கள் தொடர்பில் வலுவானதும் உண்மையானதுமான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பேரவையில் சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணை தொடர்பில் சர்வதேச சமூகத்தினர் சாதகமான கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.”
காணொளி பார்க்க
காணொளி பார்க்க
இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: கிரேக்கம், ஜேர்மன் மற்றும் கனடா அதிருப்தி-காணொளி
Reviewed by NEWMANNAR
on
March 19, 2014
Rating:

No comments:
Post a Comment