அண்மைய செய்திகள்

recent
-

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்பு - 529 பேருக்கு மரண தண்டனை

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மொர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னார் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

போராட்டத்தின்போது தலைநகர் கெய்ரோவில் வன்முறைகள் வெடித்தன. இதில் பொலிஸார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். வன்முறைகள் தொடர்பில் எகிப்தின் மின்யா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் 529 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

16 பேர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தியமை, கலவரங்களை தோற்றுவித்தமை தொடர்பில் 545 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒரே வழக்கில் 529 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை உலக அளவில் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்பு - 529 பேருக்கு மரண தண்டனை Reviewed by NEWMANNAR on March 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.