வவுனியா படகு விபத்து; மூவர் பலி
வவுனியா மாமடு குளத்தின் படகொன்று கவிழ்ந்து அனர்த்தத்திற்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
22 மற்றும் 28 வயதுடைய 2 பெண்களும் 22 வயதுடைய ஒரு இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவருமே குருமன்காடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களோடு நீரில் மூழ்கிய மேலும் மூன்று பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மாமடு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உல்லாசப் பயணமொன்றில் ஈடுப்பட்டிருந்த போதே குறித்த விபத்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
வவுனியா படகு விபத்து; மூவர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 30, 2014
Rating:

No comments:
Post a Comment