அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மின்சார சபைக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 8 கோடி ரூபா நிலுவை 4700 பேருக்கு சிவப்பு நோட்டீஸ்:-

இலங்கை மின்சார சபைக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 8 கோடி ரூபா நிலுவை 4700 பேருக்கு சிவப்பு நோட்டீஸ்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மின் பாவணையாளர்களால் இலங்கை மின்சாரசபை கிளிநொச்சி அலுவலகத்தற்கு 8 கோடி ரூபா நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி மாவட்ட மின் அத்தியட்சர் குகராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மீள் குடியேற்றத்திற்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் அரைவாசி பகுதிக்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வேகமாக மின்சார விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறுது. அதனடிப்படையில் மின்சார சபையும் பாவணையாளர்களுக்கான மின் இணைப்பையும் வேகமாக வழங்கி வருகிறது.


இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை கிளிநொச்சி மாவட்ட மின் பாவணையாளர்களால் மின்சார சபைக்கு 8 கோடி ரூபா மின் கட்டணம் நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது எனத்தெரிவித்த மின் அத்தியட்சர் இது வரை இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்தினால் 4700 மின் பாவணையாளர்களுக்கு சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


அத்தோடு பரவலாக இரண்டு மாதம் மின்சார கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபைக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 8 கோடி ரூபா நிலுவை 4700 பேருக்கு சிவப்பு நோட்டீஸ்:- Reviewed by NEWMANNAR on March 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.