அண்மைய செய்திகள்

recent
-

இணையச் சேவையை இலவசமாக வழங்கத் திட்டம்


உலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கு இணையச் சேவையை எளிதாகவும் இலவசமாகவும் பெறக் கூடிய வகையில்
புதிய திட்டத்தை நியூயோர்க்கை  மையமாக கொண்ட முதலீட்டு நிதியம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளது.

அதிக சேவைக் கட்டணம், தணிக்கை, கட்டுப்பாடு, தொலை தூரத்தை சென்றடைவதில் சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இந்த குறையை போக்கும் வகையில் அனைத்து நாட்டினரும் எளிதாக இணையத்தின் சேவையை பெற வசதியாக ‘அவுட்டர்நெட்’ என்ற புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது.

குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, செயற்கைக்கோளின் தயாரிப்புச் செலவு மட்டும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் முதல் 3 இலட்சம் அமெரிக்க டொலர் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.குறித்த செலவை நன்கொடைகள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகில் இதுவரைகாலம் இணையச் சேவையை பெற முடியமல் உள்ள சைபீரியா, அமெரிக்காவின் மேற்குப் பகுதி மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளின் கிராமப்புறங்கள், உலகின் பல்வேறு தீவுகளில் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இணையச் சேவையை இலவசமாக வழங்கத் திட்டம் Reviewed by NEWMANNAR on March 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.