இந்தியா ஏமாற்றிவிட்டது - அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி –சம்பந்தன்
இந்தியா ஏமாற்றிவிட்டது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன்மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரேரணை விரைவாக அமுல்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும்.
அதற்கு சகல நாடுகளும் ஒத்துளைக்க வேண்டும் எனவும் செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்;
இந்தியா ஏமாற்றிவிட்டது - அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி –சம்பந்தன்
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:


No comments:
Post a Comment