ஹட்டனில் ரயிலில் மோதி இளைஞர் பலி (வீடியோ)
ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 7.15 மணியளவில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மஸ்கேலியா – களனிவத்தை பகுதியைச் சேர்ந்த 20 வயதான மரியதாஸ் மைக்கல் பெர்னாண்டோ என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டனில் ரயிலில் மோதி இளைஞர் பலி (வீடியோ)
Reviewed by NEWMANNAR
on
March 25, 2014
Rating:

No comments:
Post a Comment