பேஸ்புக் தொடர்பில் மக்களை தெளிவூட்ட நடவடிக்கை
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதற்கு இலங்கை கணணி அவசர பிரதிபளிப்புக்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
பல அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவிக்கின்றார்.
பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளை இலக்காக கொண்டு இந்த தெளிவூட்டல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு எண்ணியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பேஸ்புக் தொடர்பில் மக்களை தெளிவூட்ட நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
March 08, 2014
Rating:

No comments:
Post a Comment