ஆலயங்கள், வரலாற்று பொக்கிஷங்களை சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பான பணியை ஆற்றவேண்டும். சிறிதரன்
மனிதர்கள் மட்டுமல்ல அவர்தம் வரலாறுகளும் கலை பண்பாடுகளும் கோயில்களைஅடித்தளமாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்பது வரலாறு கூறும் உண்மை . ஆலயங்கள் எமது வரலாற்றை பேணும் பொக்கிஷங்களாக விளங்குகின்றன . வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு காவிச்செல்லும் கடமையை ஆலயங்கள் ஆற்ற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார் .
வெற்றிலைக்கேணி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வினைத் தொடர்ந்து இடம்பெற்ற செல்வவிநாயகர் அருளமுதம் மலர் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,
ஆழிப் பெருங்கடலோரம் வெற்றிலைக்கேணி எனும் தமிழர் வாழ்வியலில் மறக்க முடியாத நாமம் கொண்ட அழகிய கடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வின் அடையாளமாக செல்வவிநாயகர் அருளமுதம் மலர்வெளியீடு இடம்பெற்றுள்ளது .
புகழ்பூத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிலைக்கேணி எனும் நெய்தல் நிலத்தில் இந்த மக்களின் நம்பிக்கையின் வடிவமாகி பல்வேறு இயற்கை மற்றும் மிக மோசமான போர் இடர்கள் எதிர்வந்த போதும் நம்பிக்கையின் பால் இங்கு இந்த ஆலயத்தை சுற்றி எழுப்பப்பட்ட வாழ்வு இன்று தொடர்கின்றது .
இடர்கள் வரும்போது மனிதர்கள் தங்களை மீறிய எல்லையற்ற சக்திவடிவமாக இருக்கும் ஆண்டவனை நோக்கி ஓடுவது இயல்பானது .
மனிதர்கள் மட்டுமல்ல அவர்தம் வரலாறுகளும் கலை , பண்பாடுகளும் கோயில்களை காப்பரணாகக் கொண்டு நிலைத்துள்ளன என்பது வரலாறு கூறும் உண்மை . இந்த பாரம்பரியத்தில்தான் இந்த பிரசித்திமிகு விநாயகர் ஆலயமும் இந்த மக்களின் வாழ்வின் தாங்குபடியாகத் திகழ்வதை இந்த கும்பாபிஷேக விழாவும் அதைச் சிறப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள மலரும் . இந்தியாவிலுள்ள ஆலயங்களும் நூலகங்களும் ஒரு சமூகக் கடமையை செய்கின்றன . வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு காவி ச்செல்லும் கடமையை செய்கின்றன . ஏன் அங்கே எம்மிடம் இல்லாத எம்மைப் பற்றிய வியக்கத்தகு ஆவணங்களும் பேண ப்படுகின்றன .
அந்த வகையில்தான் ஆலயங்களிலோ அல்லது பள்ளிகளிலோ அறநெறி ஸ்தாபனங்களிலோ வெளியிடப்படும் மலர்கள் அந்த மக்களின் காலத்தை வரலாற்றை பிரதிபலிக்கும் ஆவணமாக மாறவேண்டும் இரு க்க வேண்டும் என நான் விரும்புகி றேன் .
இந்த ஆலயத்தில் வெளிவந்துள்ள நெய் தல் நிலத்தின் பக்தி இலக்கியத்தின் ஒரு வடிவமாக காலத்தில் வரலாற்றை தேடுகின்றவர்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறேன் .
இந்த ஆலயமும் அதன் சமூகமும் பல தேவைகளையும் என்னிடம் சுட்டிக்காட்டி உள்ளன .
எனவே அது தொடர்பாக என்னாலான மட்டும் முயற்சி செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கமுடி யும் என உங்களுக்கு தெரிவிக்க விரும்புகி றேன் என்றார் .
இந் நிகழ்வில் மலரின் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி உபபீடாதிபதி கலாநிதி செல்வி . நி . நல்லையா நிகழ்த்தினார் .
மலரின் முதற்பிரதியை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பெற்றுக் கொண்டார் . நயப் - பு - ரையை யாழ் . நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் நடராஜா தேவராஜா வழங்கினார் .
சிறப்புரையை வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் ஆற்றினார் .
அருளாசி உரைகளை நல்லை ஆதீனமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் , பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ கனகசிவ தமிழ்கலவன் பாடசாலை அதிபர் நடராஜா தேவராஜா வழங்கினார் .
சிறப்புரையை வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் ஆற்றினார் . அருளாசி உரைகளை நல்லை ஆதீனமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ கனகசிவ குமாரக்குருக்கள் சர்வ போதகாசிரியர் இரத்தினபாலகிருஷ்ண குருக்கள் ஆகியோர் வழங்கினர் .
ஆலயங்கள், வரலாற்று பொக்கிஷங்களை சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பான பணியை ஆற்றவேண்டும். சிறிதரன்
Reviewed by NEWMANNAR
on
March 02, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 02, 2014
Rating:


No comments:
Post a Comment