அண்மைய செய்திகள்

recent
-

தேனிலவுக்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு இரண்டாம் இடம் - படங்கள்

வெளிநாட்டவர்கள் தங்களது தேனிலவைக் கொண்டாடுவதற்காகச் செல்ல சிறந்த நாடுகள் பட்டியலிலும் திருமணம் செய்துகொள்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலிலும் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 

சர்வதேச சுற்றுலாத்துறை நிறுவனமான சுவிட்ஸர்லாந்தின் குஓனி நிறுவனம் கடந்த 8 வருடங்களாக நடத்திய ஆய்வின் பயனாகவே இலங்கைக்கு இந்த இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 

திருமண வைபவங்கள் நடத்துதல் மற்றும் தேனிலவுக்கான ஹோட்டல்களைப் பதிவு செய்தல் போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்று மேற்படி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இதன் பிரகாரம், திருமணம் செய்துகொள்ள சிறந்த 10 நாடுகளாக மொரீஷியஸ், இலங்கை, அமெரிக்கா, சென்.லூசியா, அன்டிகுவா, தாய்லாந்து, பாபடோஸ், மெக்ஸிகோ, ஜமய்க்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன தெரிவாகியுள்ளன. 

தேனிலவு செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மாலைதீவுகள், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து, மொரீஷியஸ், அமெரிக்கா, இந்தோனேஷியா, மலேசியா, சென்.லூசியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 








தேனிலவுக்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு இரண்டாம் இடம் - படங்கள் Reviewed by NEWMANNAR on March 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.