அண்மைய செய்திகள்

recent
-

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை விபரங்களைக் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களுக்காக 27 வர்த்தகர்களுக்கு 90,500 ரூபா தண்டம்

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் விபரங்களைக்
காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களுக்காக யாழ்.மாவட்டத்திலுள்ள 27 வர்த்தகர்களுக்கு 90,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி தனசேகரம் வசந்தசேகரன் திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.

இம்மாதம் (மார்ச்) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்போது 27 வர்த்தக நிலையங்களிலும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் விபரங்கள் காட்சிப்படுத்தப்படாமை போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிராக  5 நீதிமன்றங்களில்; வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் குறித்த 27 வர்த்தகர்களுக்கும் 90,500 ரூபா தண்டம் நீதிமன்றங்களினால் விதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை விபரங்களைக் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களுக்காக 27 வர்த்தகர்களுக்கு 90,500 ரூபா தண்டம் Reviewed by NEWMANNAR on March 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.