திருமலை, நிலாவெளியில் பஸ் - ஆட்டோர் நேருக்கு நேர் மோதி விபத்து!- ஒருவர் பலி
திருகோணமலை, நிலாவெளி பகுதியில் முச்சக்கரவண்டி - பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் சென்ற மூவரில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் அபேகுணவர்த்தன, மஞ்சுள, சமிந்தகுமார ஆகிய மூவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து சுற்றுலா வந்த பஸ் வண்டியே ஆட்டோவில் மோதுண்டதாகவும் தெரியவருகின்றது.
நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவருடைய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலை, நிலாவெளியில் பஸ் - ஆட்டோர் நேருக்கு நேர் மோதி விபத்து!- ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:


No comments:
Post a Comment