பேஸ்புக் நண்பருடனான ஓரினச்சேர்க்கை விவகாரமே நுகேகொடை வர்த்தகரின் கொலைக்குக் காரணம்?
நுகேகொடை, கங்கொடவில பகுதியில் கடந்த ஜனவரி 18ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தக் கொலை தொடர்பில் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் பேஸ்புக் மூலமாக, கொலைசெய்யப்பட்ட வர்த்தகருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
54 வயதான வர்த்தகர், பேஸ்புக்கில் கணக்கொன்றை ஆரம்பித்து அதில் தான் ஒரினச் சேர்க்கையில் விருப்பம் உடையவர் என தகவல் பரிமாறியுள்ளார்.
இதன் காரணமாக, இளைஞர் ஒருவருடன் குறித்த வர்த்தகருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, அந்த இளைஞர் வர்த்தகரை மொரட்டுவையில் உள்ள மற்றுமொரு நபருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பொலிஸாரின் தகவல்களின் அடிப்படையில், கொலையுண்ட வர்த்தகர், புதிதாக அறிமுகமான மொரட்டுவை இளைஞருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மொரட்டுவையைச் சேர்ந்த அந்த இளைஞர், வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடும் நோக்கில் அவருடனான தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர் கொலையுண்ட சந்தர்ப்பத்தில், குறித்த இளைஞர் நுகேகொடையில் உள்ள வர்த்தகரின் வீட்டில் அவரை சந்தித்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த இளைஞர் மேலும் மூன்று நபர்களுடன் இணைந்து வர்த்தகரைக் கொலை செய்துவிட்டு, அவரின் மடிக்கணணி மற்றும் 8000 ரூபாவையும் திருடிச் சென்றுள்ளதாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேஸ்புக் நண்பருடனான ஓரினச்சேர்க்கை விவகாரமே நுகேகொடை வர்த்தகரின் கொலைக்குக் காரணம்?
Reviewed by NEWMANNAR
on
March 04, 2014
Rating:

No comments:
Post a Comment