மன்னார் புதைகுழி : பாதுகாக்க பொலிஸ் நடவடிக்கை
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் நேற்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
இதேவேளை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியைத் தற்காலிகமாக நிறுத்தி அங்கிருந்த மனித எச்சங்கள் ஆய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு புதைகுழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். 
நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் புதைகுழியை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட குறித்த எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் 80 பெட்டிகளில் தனித்தனியாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுக்குரியவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதை கண்டறியவதற்காக புராதன மனித எச்சங்களைப் பரிசோதனை செய்யும் வைத்திய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பான புலன் விசாரணைகளும் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
மன்னார் புதைகுழி : பாதுகாக்க பொலிஸ் நடவடிக்கை
 Reviewed by NEWMANNAR
        on 
        
March 09, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 09, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
March 09, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 09, 2014
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment