வன்னியின் (மன்னார் வவுனியா முல்லைத்தீவு) அபிவிருத்தியும் அரசியல வாதிகளின் நிலைப்பாடும்
.jpg)
உணர்ந்துள்ளார்கள். வன்னி மாவட்டத்தை ஆட்சி புரியும் அரசியல்வாதிகளில் சிலர் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் குடும்பம், தங்கள் உறவுகள், தங்கள் இனம் என்ற ஒரு வட்டத்துக்குள் தங்களை முடக்கிக்கொண்டு, மக்களின் ஆதரவுமூலமே தாங்கள் அரசியல்வாதிகளாக உருவாகினார்கள் என்பதை மறந்து மக்களின் நலன்களை, மக்களின் தேவைகளை, மக்களுக்கான அபிவிருத்தியைப்பற்றிச் சிந்திக்காது தங்களைப்பற்றி மட்டும் சிந்தித்து செயற்பட்டதாற்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
சில அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த கையோடு நமது நாட்டை விட்டு வெளியேறி, பின் அடுத்த தேர்தல் வரும்போது அவர்களும் மக்கள் முன் தோன்றி தம் ஆவேசப் பேச்சுக்கள் மூலம் மக்களைத் தூண்டிவிட்டு நிருவாகத்தைக் கைப்பற்றிக்கொண்டு மீண்டும் தலைமறைவாகி விடுவார்கள். இப்படியான சுயநலப்போக்கினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் யுத்த காலத்;தைவிட தற்போது அதிக துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
உறவினர்கள், சொத்துக்கள், வீடு வாசல்கள், எதிர்காலம் எல்லாவற்றையும் இழந்து முகாம் வாழக்கை வாழ்ந்தவர்கள் தற்போது அகையும்விட மிக மோசமான, துன்பமான வாழ்க்கையை வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள்;. அவர்களின் இழப்புக்கள் எண்ணிலடங்காதவை, சொல்லிலும் அடங்காதவை.
பேரிழப்புக்களைச் சந்தித்த மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை, கட்டிக் கொடுப்பார் யாருமில்லை. வீதிகள், மின்சாரம், போக்குவரத்து, பஸ்தரிப்ப நிலையங்கள் குடிநீர் வசதிகள், பாடசாலை, வைத்தியசாலை போன்றவை புனரமைப்புச் செய்யப்படவில்லை. படித்தவர்களுக்கான தொழில் முயற்சிகள், வேலை வாய்ப்புக்கள், இன்னும் பல அத்தியாவசிய தேவைகள செய்து கொடுக்கப்படவில்லை. உதாரணமாக முள்ளிக்குளம், மன்னார், வன்னியில் உள்ள பல கிராமங்களைச் சென்று பார்த்தால் இந்த பரிதாப நிலையைக் காணலாம்.
இந்த பரிதாப நிலை ஏற்பட யார் காரணம்? நாட்டை ஆளும் ஜனாதிபதியா? மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களா? இல்லவே இல்லை. காலாகாலமாக இப்பகுதிகளில் முண்டியடித்துப் போட்டிபோட்டுக்கொண்டு அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகளே காரணமாயிருக்கிறார்கள். இங்குள்ள மக்களின் பரிதாப நிலையைச் சீர்ப்படுத்துவது யார்? இவர்களின் துன்பங்களைப் போக்கவேண்டிய பொறுப்பு யாருக்கு உண்டு? எல்லாமே; கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. வன்னியின் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான். மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில கிராமங்களைத் தவிர்ந்த ஏனைய கிராமங்களில் வாழ்க்கை மிகவும் கசப்பாகவே இருக்கின்றது.
மற்றைய மாவட்டங்களைப் போன்று நவீன முறையில் பஸ்தரிப்பு நிலையங்களை மக்களின் நன்மை கருதி அமைக்க முடியாதா? ஏன் முடியாது? பல கிராமங்களில் உள்ள வீதிகள் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. ஏறெடுத்துப் பார்ப்பதற்கு யாருமில்லையா?
மன்னார் மாவட்டம் காலாகாலமாக பின்தங்கிய மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதே, ஏன்?
தற்போது ஒருதலைப் பட்சமான அபிவிருத்திகள் நடைபெறுவதை மக்கள் கண்கூடாகக் கண்டு ஆத்திரமும் வேதனையும் அடைந்து அரசின்மேல் அதிருப்தியடைந்துள்ளனர். மன்னார்
தீவில் சனச்செறிவு மிக ஜதாக உள்ள இடங்களில் காடுகளை அழித்து புதிய குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் வீதிகள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் காலாகாலமாக மக்கள் செறிவாக வாழும் பல முக்கிய கிராமங்களில் வீதிகள் சீரழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
யுத்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு எந்தவிதமான வீட்டுத் திட்டமும் இல்லை: ஆனால் வீடுகளுக்கோ, சொத்துக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாத கிராம மக்களுக்க 100, 200, 1000 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டங்கள் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்படியாகக் கட்டப்பட்ட வீடுகளில் மக்களல்ல ஆடுமாடுகளே குடியிருக்கின்றன.
ஒரு சமூகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருப்பதற்கும் மற்றுமொரு சமூகம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கும் காரணம் அப்பகுதியிலுள்ள அரசியல்வாதிகளே.
காலங்காலமாக இன உணர்வுகளைத் தூணடிவி;டுவதனால் தமிழ்ச் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்கள், வசதி வாய்ப்புக்கள், வேலைவாய்ப்புக்கள் எல்லாம் திசைதிருப்பப்படுகின்றமைக்கும் அரசோடு இணைந்துள்ள சமூகம் அதீத வளர்ச்சியடைவதற்கும் காரணமாய் அமைகின்றன என்பதை இப்போதாவது அரசியல்வாதிகள் எண்ணிப்பார்ப்பது சிறந்தது.
அடுத்ததாக நாம் மிக ஆழமாகச் சிந்திக்கவேண்டிய காத்திரமான விடயமொன்றுண்டு. மன்னார் தீவானது பல இடங்களில் கடல் மட்டத்துக்கும் பதிந்த நிலமட்டத்தைக் கொண்டுள்ளது. அதேவேளை நாலு பக்கமும் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இப்படியான சிறிய தீவில் மண் அகழ்வு வரையறை .இன்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்வபாயகரமான மன்அகழ்வை நிறுத்தும்படி நாம் இது தொடர்பான பொறுப்பதிகாரிகளோடு ; தொடர்பு கொண்டபோது இந்திய வீட்டுத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு இரண்டு வருடங்களுக்குத் தொடாந்து மண் எடுப்பது தவிர்க்கமுடியாததொன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மண்அகழ்வு நடைபெறுமானால் மன்னார் தீவு கடலுக்கடியில் போவது உறுதியாகிவிடும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். நிலம் இருந்தால்தான் வீடுகள் கட்டலாம். மண்அகழ்வு தொடருமானால் வீடுகள் கட்டிமுடியுந் தறுவாயில் கட்டிய வீடுகள் அனைத்தும் கடலோடு சங்கமமாகிவிடும். அப்பொழுது இந்த வீடுகளை என்ன செய்ய முடியும்?
இந்திய வீட்டுத்திட்டத்தில் பேசாலைக் கிராமம் உட்படுத்தப்படவில்லை. ஆனால் பேசாலையில் மிகமிக ஆழமான குழிபறித்து, மண்எடுத்து, வேறுகிராமங்களி;ல் வீடுகளைக் கட்டி அம்மக்களை வாழ வைத்து, பேசாலைக் கிராமத்தையும் அம்மக்களையும் பறித்த ஆழ்குழியில் மூழ்கடிப்பதுதான் சில சுயநலசவாதிகளின் திட்டம்போலல்லவா தோன்றுகிறது.
வன்னி மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் அரசியல்வாதிகள் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு அவைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
நீ. செபமாலை பீரிஸ்
மன்னார் பிரதேச சபை உறுப்பினர்;, பேசாலை;
(சிறீலங்கா சுதந்திரக் கட்சி)
வன்னியின் (மன்னார் வவுனியா முல்லைத்தீவு) அபிவிருத்தியும் அரசியல வாதிகளின் நிலைப்பாடும்
Reviewed by Author
on
March 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment