அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமை ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்குக- மன்னார் ஆயர் கோரிக்கை

பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைச்செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோவும், அருட் தந்தை பிரவீனும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள்  இல்லை .தமது கடமைகளைதான் செய்துள்ளனர். எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்- இவ்வாறு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர். இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

மேலும் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி , விபூசிகா ஆகியோர் கைதான சம்பவம் தொடர்பில் தகவல்களை திரட்டச் சென்றபோதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதச் சட்டத்தின் மூலம்  கைது செய்யும் அளவுக்கு இவர்கள் என்ன செய்துள்ளனர்? மனித உரிமை தொடர்பில் யாரும் யாரிடமும் கருத்துக்களை பெறமுடியும். இதைத்தானே இவர்களும் செய்துள்ளனர். அது தவறா?

அரசாங்கத்திற்கு எதிராக இவர்கள் எதையும் கேட்கவில்லை இவர்கள் இருவரும் மக்களிடம் மேற்கொண்ட விசாரணை மூலம் உண்மை என்னவென்பதை வெளிப்படுத்தவே விரும்பினார்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும். - என்றார்

மனித உரிமை ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்குக- மன்னார் ஆயர் கோரிக்கை Reviewed by NEWMANNAR on March 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.