குழந்தைகளின் வயிறுகளில் சுற்றி தங்கச் சங்கிலிகள் கடத்த முயற்சி
28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலிகளை குழந்தைகளின் வயிறுகளில் சுற்றி அவற்றை இந்தியாவுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட இலங்கை தம்பதியரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்முனையைச் சேர்ந்த மேற்படி தம்பதியர், தங்களது 4 வயது மக
ன் மற்றும் 14 வயது குழந்தை ஆகியவற்றின் வயிறுகளில் தலா மும்மூன்று தங்கச் சங்கிலிகளை சுற்றி அவற்றை சென்னைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அத்துடன், அக்குழந்தைகளின் தாயான சந்தேகநபரும் தங்க வளையல்கள் பலவற்றை அணிந்துக்கொண்டு அவற்றை கடத்த முற்பட்டுள்ளார்.
இவர்களிடமிருந்து சுமார் 560 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தைகளின் வயிறுகளில் சுற்றி தங்கச் சங்கிலிகள் கடத்த முயற்சி
Reviewed by NEWMANNAR
on
April 07, 2014
Rating:

No comments:
Post a Comment