அண்மைய செய்திகள்

recent
-

மின்னல் தாக்கி இருவர் பலி

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

விவசாயத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த இருவரே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மழை பெய்த போது நேற்று மாலை, மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குலியாப்பிட்டி மற்றும் பிங்கிரிய ஆகிய பகுதிகளை சேர்ந்ந 24 , 36 வயதான இருவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கருவலகஸ்வெவ வைத்தயசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கதிர்காமத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளார்.

மேலும், மாத்தறை மொறவக்க பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றின் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடும் காற்றியால் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

இதனிடையே பலத்த காற்று காரணமாக வீடுகள் பலவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்னல் தாக்கி இருவர் பலி Reviewed by NEWMANNAR on April 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.