வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம்
புலத்சிங்கள – ஹொரன வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேனொன்று, கொங்கிரீட் கலவை தயாரிக்கும் வாகனத்துடன் மோதி, விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் புலத்திங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஐவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹொரண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் புலத்சிங்கள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
April 07, 2014
Rating:

No comments:
Post a Comment