மலேசிய விமானத்திலிருந்து மீண்டும் சமிக்ஞைகள்
காணாமற்போன மலேசிய விமானத்தின் பதிவுக் கருவியில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்ற மேலும் இரு சமிக்ஞைகளை கண்டுபிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எச்.370 விமானத்தைத் தேடும் பணியின் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய ஒருங்கிணைப்பாளர் அன்குஸ் ஹௌஸ்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கடற்படைப் படகால் கட்டியிழுத்துச் செல்லப்படும் சமிக்ஞைகளைத் தேடும் கருவி, ஸ்திரமான, குறிப்பான, தெளிவான சமிக்ஞைகளை கண்டறிந்திருப்பதாகவும், அவை ஐந்தரை முதல் 7 நிமிடங்கள் வரை நீடித்திருந்ததாகவும் அன்குஸ் ஹௌஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதியில் இரு சமிக்ஞைகள் அறியப்பட்டிருந்தன.
இவை நான்கும் நீரின் அடியில் தேடுதல் நடத்துவதற்கான ஒரு குறித்த சிறிய பரப்பை நிர்ணயிக்க உதவும்.
தாம் சரியான இடத்தில்தான் தேடுகிறோம் என்று தாம் நம்புவதாகவும், விமானம் இருக்கும் இடத்தை உறுதி செய்வதற்கு முன்னதாக அதன் சிதிலங்களை அடையாளம் காணவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மலேசிய விமானத்திலிருந்து மீண்டும் சமிக்ஞைகள்
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:


No comments:
Post a Comment