2015 முதல் இலங்கை கல்வி முறைமை முற்றாக மாற்றம்!
அடுத்த வருடம் முதல் இலங்கையில் கல்வி முறையில் முற்றாக மாற்றம் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் என்பன மாற்றி அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களும் மாற்றி அமைக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கையை அமுலாக்கியதுடன், அது சார்ந்த கல்வி முறையையும் அமுலாக்கி இருந்தது.
லண்டன் கல்வி முறையில் அடிப்படையில் இலங்கையின் கல்வி முறையும் காணப்பட்டதால், இலங்கையில் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற முடியவில்லை.
இதன் காரணமாகவே கடந்த காலங்களில் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி போரிட்டனர்.
இந்தநிலையில் தற்போது இந்த கல்வி முறைமையை முற்றாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2015 முதல் இலங்கை கல்வி முறைமை முற்றாக மாற்றம்!
Reviewed by NEWMANNAR
on
April 14, 2014
Rating:

No comments:
Post a Comment