காணாமல் போன மலேஷிய விமானத்தின் சமிஞ்சைகள் கிடைத்துள்ளதாக தகவல்
காணாமல் போன மலேஷிய விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் சமிஞ்சைகள் சீனாவின் கப்பல் ஒன்றுக்கு கிட்டியுள்ளது
தென் சீன கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படிருந்த சீன கப்பலொன்றுக்கே இந்த சமிஞ்சை கிட்டியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த சமிஞ்சை விநாடிக்கு 37.5 கிலோ ஹேட்ஸ் அலைவரிசையில் தென்பட்டுள்ளதாகவும், இவை காணாமல் போன மலேஷிய விமானத்தின் சமிஞ்சைகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இருந்த போதிலும் இந்த சமிஞ்சைகள் எம்.எச் 370 விமானத்தினுடையது என உறுதியாக கூறமுடியாது என சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
குறித்த விமானம் தென் சீனக்கடலில் விபத்துக்குள்ளானதாக நம்பப்பட்டுவரும் நிலையில் இதுவரை அதன் பாகங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் பல நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் தொடர்ந்தும் தென் சீன கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்ககைகளில் ஈடுபட்டுவருகின்றன
காணாமல் போன மலேஷிய விமானத்தின் சமிஞ்சைகள் கிடைத்துள்ளதாக தகவல்
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:


No comments:
Post a Comment