தசை சிதைவு நோய் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்குவோம் - விஜயசேதுபதி, வரலட்சுமி, காயத்ரி
குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று தசை சிதைவு நோய். கிட்டத்தட்ட 3 ஆயிரம் குழந்தைகளில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறதாம். இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் உடம்பில் சக்தி இல்லாதவர்களைப்போன்று நடக்கத் தொடங்கும் காலகட்டத்தில் தடுமாறி அடிக்கடி கீழே விழுவார்களாம்.
காலப்போக்கில் சிலர் மூன்று சக்கர வண்டியிலேயே பயணிக்க வேண்டிய அபாயகர சூழ்நிலையும் ஏற்படுகிறதாம்.
அதனால் ஜீவன் பவுண்டேசன் என்ற நிறுவனம் ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்துகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் தொடங்கும் இந்த பேரணியில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நடிகர் விஜயசேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தசை சிதைவு நோய் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இந்த பேரணியில் சமூக ஆர்வமுள்ள இன்னும் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்களாம். மயோரேலி என்ற இந்த பேரணியின்போது அந்த நோய் குறித்த பிரச்சாரமும் நடக்கிறதாம்.
தசை சிதைவு நோய் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்குவோம் - விஜயசேதுபதி, வரலட்சுமி, காயத்ரி
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment