முல்லைத்தீவில் சில பகுதிகளில் கடலுணவுகள் பல்வேறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடலுணவுகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல்வேறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைகளில் கடலணவுகளுக்கான விலை நிர்ணயிக்கப்படாமல் அதி கூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மீன் வகைகள் 600 ரூபா முதல் 650 ரூபா வரைக்கும், 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ இறால் ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் இச்சந்தைகளில் கடலுணவுகளை வாங்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் நல்லின மீன் வகைகள் நாள் பட்ட பழுதடைந்த பின்னரும் குளிரூட்டப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பழுதடைந்த மீன் வகை-களும் அதிகூடிய விலைகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெறுவதால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலுணவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ஒன்று பேணப்பட வேண்டும் எனவும் பழுதடைந்த மீன் வகைகளை விற்பனை செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் சில பகுதிகளில் கடலுணவுகள் பல்வேறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment