மயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய மற்றுமொரு மலேஷிய விமானம் ”MH136” (Video)
மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.
இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் எடிலைட் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
Tiger Airways விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எடிலைட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில், குறித்த விமான நிலையத்தில் இருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான MH136 விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில், ஒரே ஓடு தளத்தில் ஒரு விமானம் தரையிறங்க முற்படுகையில், மற்றமொரு விமானம் நகர்வதை அறிந்த அதிகாரிகள் MH136 விமானத்தின் விமானிக்கு அறிவுறுத்தல் விடுத்தனர்.
சிறப்பாக செயற்பட்ட MH136 விமானத்தின் விமானி, பாதையை மாற்றி பாரிய விபத்து ஒன்று நேர்வதை தடுத்தார், அதேவேளை Tiger Airways விமானமும் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்பபத்தில் MH136 விமானத்தில் 167 பயணிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய மற்றுமொரு மலேஷிய விமானம் ”MH136” (Video)
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment