அண்மைய செய்திகள்

recent
-

காரைநகர் சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

காரைநகர் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை யாழ்ப்பாணம் காரைநகரில் பாடசாலை சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

 துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கடற்படை சிப்பாய்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது பாடசாலை சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று 19 முறைப்பாடு செய்துள்ளது. 

 யாழ். காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
காரைநகர் சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை Reviewed by NEWMANNAR on July 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.