அண்மைய செய்திகள்

recent
-

மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் சாதனைபுரிந்த மன்/புனித ஆனாள் ம.ம.வி மாணவர்களை கௌரவிக்கும் விழா-2014

எமது பாடசாலையில் இவ்வருடம் நடைப்பெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டியில் எமது மாணவர்கள் பங்குப்பற்றி பாடசாலைக்கும் எம்மண்ணிற்கும் பெருமைத்தேடி தந்ததுடன் இவர்கள் புதிய சாதனைகளையும் நிலைநாட்டி உள்ளனர். 09 தங்க பதக்கங்களையும் 06 வெள்ளிப் பதக்கங்களையும் 07 வெண்கலப் பதக்கங்களையும் மொத்தமாக 22 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். 

 இப்போட்டியில் 19 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் செல்வன். S.வேணிலன் மார்க் என்பவர் நீளம் பாய்தல் நிகழ்வில் 6.83m பாய்ந்து புதியதொரு சாதனையை நிலைநாட்டியதுடன் 886 புள்ளிகளைப்பெற்று மைதான நிகழ்வில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டு எமது வலயத்திலும் முன்னணியில் திகழ்ந்து வலயத்திற்கே பெருமையைத் தேடித் தந்துள்ளார். 21 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் செல்வன் S.அமலதாஸ் என்பவர் 200அ ஓட்டத்தில் 23.5sec களில் ஓட்டத்தை ஓடி முடித்து முதலிடத்தை பெற்று புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

 மேலும் 21 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 4x100m அஞ்சல் ஓட்டப்போட்டியில் 45.5sec களில் ஓட்டத்தை ஓடி முதலிடத்தைப் பெற்று புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். 17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் செல்வன் A.கலைவேந்தன் குரூஸ் 100m,200m ஆகிய நிகழ்வுகளில் முதலிடத்தையும் 21 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் செல்வன் S.பிரதீப் பறுணாந்து 110m தடைதாண்டி ஓடுதல் நிகழ்வில் முதலிடத்தையும் 17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் செல்வன் னு.ரெம்சியஸ் பறுணாந்து என்பவர் குண்டெறிதல் நிகழ்வில் இரண்டாம் இடத்தையும் 21 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 4x400m அஞ்சல் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் 17 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் 4x100m அஞ்சல் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று எமது பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளனர். 

 இச்சாதனையை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் விழா 03.07.0214 அன்று எமது பாடசாலையில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரமுகர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.M. ஆபேல் றெவல் அவர்களும் நானாட்டான் கோட்டக்கல்வி அதிகாரி திரு T.ஐகானந்தன் அவர்களும் மடு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு து. ஆரோக்கியம் குரூஸ் அவர்களும் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு. செபஸ்ரியான்பிள்ளை அவர்களும் மன்னார் வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு. S. ஜேக்கப் அவர்களும் கலந்துக்கொண்டு இம்மாணவர்களை வாழ்த்தி நின்றார்கள்.

 மேலும் இவர்களை சகல விதத்திலும் வழிப்படுத்திய திரு. J. ஒகஸ்ரின் திரு. F.S.I.லெம்பேட் திரு. S. பற்றசன் திருமதி. D.S.I.லெம்பேட் ஆகியோரை இப்பாடசாலை சமூகம் வாழ்த்தி இவர்களை நன்றியோடு நினைவுக்கூறி நிற்கின்றது.








மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் சாதனைபுரிந்த மன்/புனித ஆனாள் ம.ம.வி மாணவர்களை கௌரவிக்கும் விழா-2014 Reviewed by NEWMANNAR on July 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.