நளினியின் மேன்முறையீடு சம்பந்தமான வழக்கு; மத்திய அரசுக்கு விளக்கமளிக்க உத்தரவு
இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு முன்னர், மத்திய அரசின் கருத்தை கேட்டறியுமாறு கூறும் சட்டத்தை நீக்குமாறு கோரி, நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட நளினி, குற்றவாளியை விடுவிப்பதற்கு முன்னர் மத்திய அரசின் கருத்தைக் கேட்குமாறு தெரிவிக்கும், இந்திய கிரிமினல் தண்டனை சட்டப் பிரிவை நீக்குமாறு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது, இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதென நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், இந்த விடயம் தொடர்பில் மத்திய உள்துறைச் செயலாளரை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தி ஹிந்து குறிப்பிடுகின்றது.
நளினியின் மேன்முறையீடு சம்பந்தமான வழக்கு; மத்திய அரசுக்கு விளக்கமளிக்க உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:

No comments:
Post a Comment