யாழ்.மாவிட்டபுரம் அமெரிக்க மிசன் பாடசாலை மூன்று வருடமாக திறக்கப்படவில்லை
யாழ்.வலிகாமம் வடக்கு-மாவிட்டபுரம் பகுதியில் 43 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மாவட்ட புரம் தெற்குஅமெரிக்க மிஷன் பாடசாலை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக திறக்கப்படாத நிலையில் இருப்பதாகவும் , திறக்கப்படாமைக்கான காரணமும் உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை.
எனவும்.வலி,வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலை 1990ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற போர் மற்றும் இடப்பெயர்வினால் சேதமடைந்த நிலையில், 2010ம் ஆண்டு மீண்டும் இப்பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் 2011ம் ஆண்டு யூன் மாதம் 14ம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் துரித மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் இந்தப் பாடசாலை 43லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரை பாடசாலை திறக்கப்படவில்லை, பாடசாலைக்காக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தப் பகுதி ஆரம்பப்பிரிவு மாணவர்கள் நீண்டு தூரம் பயணித்து வேறு பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வளவு பெரும் தொகை நிதியில் பாடசாலையினை கட்டி முடித்த பின்னர் இன்னமும் அது திறக்கப்படாமலிருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் புதிய பாடசாலைக் கட்டிடம் உரிய முறையில் பொறுப்புவாய்ந்தவர்களினால் பராமரிக்கப்படாமையினால் கட்டிடம சேதமடைந்தும், கிணற்றிலுள்ள நீர் பம்பிக்கான குழாய்கள் திருடப்பட்டும் அழிவடைந்து கொண்டிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்,என்னால் சுட்டிக்காட்டப்பட்டபோதும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்.மாவிட்டபுரம் அமெரிக்க மிசன் பாடசாலை மூன்று வருடமாக திறக்கப்படவில்லை
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:
No comments:
Post a Comment