அண்மைய செய்திகள்

recent
-

சிகப்பு ரோஜாக்கள் ரீமேக் ஆகிறது

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக் கரசி, கே.பாக்யராஜ் நடித்த படம், ‘சிகப்பு ரோஜாக்கள்’. இளையராஜா இசையமைப்பில் 1978ல் ரிலீசான இப்படம், 36 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் ஆகிறது. இப்படத்தின் மூலம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி இயக்குனராக அறிமுக மாகிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோரிடம் சில படங்களில் உதவி இயக்குன ராகப் பணியாற்றியுள்ள நான், பல படங்களில் நடித்துள்ளேன். இப்போது ‘13’, ‘வாய்மை’, ‘கதிர்வேல் காக்க’ படங்களை தொடர்ந்து அகத்தியன் இயக்கத்தில் சேரன், சமுத்திரக்கனி, விஜயலட்சுமி, ஓவியாவுடன் இணைந்து நடிக்கிறேன். 

வரும் டிசம்பர் மாதம் ‘சிகப்பு ரோஜாக்கள்’ ரீமேக்கை இயக்குகிறேன். அதற்கு ‘சிவப்பு ரோஜா’ என்று பெயரிட்டுள்ளேன். புதுமுகங்கள் நடிக்கின்றனர். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நான் நடிக்கவில்லை’ என்றார்.
சிகப்பு ரோஜாக்கள் ரீமேக் ஆகிறது Reviewed by NEWMANNAR on August 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.