மடு அன்னையின் ஆவணித்திருவிழா-படங்கள்
மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று(15) வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் தலைமையில்,இலங்கை கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை ,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருபபலியாக ஒப்புக்கொடுத்தனர்.
மடு அன்னையின் ஆவணித்திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(15) திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது இத்தாலி ஆயர் மன்ற பிரதிநிதிகள்,கத்தோலிக்க குருக்கள்,அருட்சகோதரிகள் என சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்ததோடு அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண அமைச்சர்,வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இம்முறை மடுத்திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மடு அன்னையின் ஆவணித்திருவிழா-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 15, 2014
Rating:
No comments:
Post a Comment