அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக அலரிமாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், அமெரிக்காவுக்கு சனிக்கிழமை காலையிலேயே புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய மருத்துவ பரிசோதனைக்காக ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான டட்லி ராஜபக்ஷ, அண்மையில் இலங்கை வந்திருந்ததாகவும் அவருடனேயே ஜனாதிபதி, அங்கு சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்கா செல்வதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் செயலகம் ஏற்கெனவே உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
August 25, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment