கரிமலையூற்று பழைமை வாய்ந்த பள்ளிவாயல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது
1880களுக்கு முன்னர் நிர்மணிக்கப்பட்ட திருகோணமலை, வெள்ளைமணல், கரிமலையூற்று ஜும்ஆ பள்ளிவாயல் இன்று காலை இராணுவத்தினரால் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. (மாபிள் பீச் பகுதியில் குறித்த பள்ளிவாயல் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது)
2009ம் ஆண்டு யுத்த நிறைவைத் தொடர்ந்து இராணுவத்தேவை கருதி கரிமலையூற்று மக்களை குறித்த கிராமத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றி வெளியிடங்களில் குடியேறுமாறு பணித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பள்ளிவாயலும் 2009முதல் இயங்காமலே காணப்பட்டது. பல அரசியல் பிரமுகர்கள் குறித்த பள்ளிவாயல் விடயத்தில் நல்ல தீர்வைப் பெற்றுத்தருவோம் என வாக்குறுதியளித்திருந்த நிலையில் இன்று இப்பள்ளிவாயல் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தினர் கிண்ணியா பொலிஸில் இது குறித்து முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர்.
உள்ளூர் மற்றும் மாவட்ட, மாகாண அரசியல் பிரமுகர்களை இது குறித்து தொடர்புகொள்ள முற்பட்டபோதும் எவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என அங்கிருந்து கருத்து வெளியிட்ட பள்ளி நிர்வாகி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
இது விடயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது முழுமையான கவனத்தை செலுத்தவேண்டி முன்னணியின் தலைமைத்துவ சபை இது குறித்து ஆராயவுள்ளதோடு, களத்தில் நிலமைகளை அறிந்துகொள்வதற்காக எமது அங்கத்தவர் ஒருவர் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய அ.அஸ்மின் தெரிவித்தார்.
கரிமலையூற்று பழைமை வாய்ந்த பள்ளிவாயல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
August 17, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment