சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தொடர்ந்தும் தடுப்புக்காவலில்; தனக்குத் தானே காயங்களை ஏற்படுத்திக்கொண்டாரா?
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி குறித்த மாணவன் மீது பல்கலைக்கழக விடுதிக்குள் தாக்குதல் நடத்தப்பட்டதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவன் மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அளித்த வாக்குமூலங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மாணவனை கைது செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தனக்குத் தானே காயங்களை ஏற்படுத்திக்கொண்டதாக குறித்த மாணவன் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மாணவன் வழங்கிய தகவல்களுக்கு அமைய காயத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பிளேட், பொல்லு மற்றும் கைகளை கட்டிக்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட வயர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தொடர்ந்தும் தடுப்புக்காவலில்; தனக்குத் தானே காயங்களை ஏற்படுத்திக்கொண்டாரா?
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


No comments:
Post a Comment