கொக்கட்டிச்சோலைப் பகுதியில்எலும்புக்கூடுகள் மீட்பு
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றிலேயே மேற்படி எலும்புக் கூடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனுடன் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் உடைகள் என்பனவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தப் பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதிகளாகவே குறித்த எலும்புக் கூடுகள் இருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிக்குடி நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொக்கட்டிச்சோலைப் பகுதியில்எலும்புக்கூடுகள் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
August 21, 2014
Rating:

No comments:
Post a Comment