மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நுளம்பின் பெருக்கத்ததை குறைக்க புகை அடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக புகை அடிக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் எஸ்.என்.எம்.சஜானியின் மேற்பார்வையில் புகை அடிக்கும் வேலைத்திட்டம் இடம் பெற்று வருகின்றது.
நேற்று புதன் கிழமை மாலை முதல் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அண்மையில் பெய்த மழையினைத் தொடர்ந்து மன்னார் வைத்தியசாலை வளாக பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் வைத்திய சாலையில் நுளம்பின் பரவல் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் முகமாகவே புகை அடிக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் எஸ்.என்.எம்.சஜானி மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நுளம்பின் பெருக்கத்ததை குறைக்க புகை அடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்.
Reviewed by NEWMANNAR
on
August 21, 2014
Rating:
No comments:
Post a Comment