பேஸ்புக்கில் வாலிபனுக்கு வந்த மிரட்டல்: உயிரை விட்ட பரிதாபம்
கனடாவில் பேஸ்புக் மூலமாக வந்த மிரட்டலுக்கு பயந்து வாலிபன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
கனடாவின் கீயூபெக் (Quebec) மாகாணத்தை சேர்ந்த மேக்சிமி போர்கஸ் (Maxime Forgues) என்ற 19 வயது வாலிபனிற்கு பேஸ்புக் நபர் ஒருவர் நட்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை மேக்சிமி ஏற்றுக்கொண்டதும், போலி கணக்கின் மூலம் வந்த அழைப்பு தன்னை ஒரு ”பெண்” என இவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
நாளடைவில் இவர்களுக்கிடையே நெருக்கம் ஏற்படவே மேக்சிமியிடம் அந்த “போலி” பெண், பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவது போல போஸ் கொடுத்து நிர்வாண புகைப்படங்களை எடுக்கும்படி கேட்டதையடுத்து மேக்சிமியும் அனுப்பியுள்ளார்.
இதன்பின் அந்த புகைப்படங்களை வைத்து 4,000 டொலர்கள் தரவேண்டும் இல்லையேல் அவை அனைத்தையும், அவனது பேஸ்புக் நண்பர்களுக்கு அனுப்ப போவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் வருத்தமடைந்த மேக்சிமி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
இச்செயல் இவனது பெற்றோருக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து இவனது பெற்றோர் கூறுகையில், எனது மகனின் மரணம் சமூக வலைத்தளங்களில் அரட்டையடிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் உங்களிற்கு தெரியாதவர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், மேக்சிமியை ஏமாற்றிய நபர் ஐவரி காஸ்ட் (Ivory Coast) பகுதியை சேர்ந்தவராய் இருப்பார் என நம்புவதாக கூறியுள்ளனர்.
பேஸ்புக்கில் வாலிபனுக்கு வந்த மிரட்டல்: உயிரை விட்ட பரிதாபம்
Reviewed by NEWMANNAR
on
August 20, 2014
Rating:

No comments:
Post a Comment