அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதாவுக்கு அடுத்து கிறிஸ்த்மஸ் தினத்திற்குள் சோனியா, ராகுல் சிறை நிச்சயம் : சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தன் வேலை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என்று வர்ணித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்குள் தள்ளுவதே தனது வேலை என்று கூறியுள்ளார். 

 1996ஆம் ஆண்டே சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா மீது பதிவு செய்த சுப்பிரமணியன் சுவாமி, இது பற்றி கூறுகையில், “அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்றால் ஒரு இந்தியனாக எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார். 

 மேலும் ரூ.100 கோடி அபராதமெல்லாம் அவருக்கு ஒன்றுமேயில்லை என்று நையாண்டியும் செய்தார். “நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, மற்றும் ராகுல் காந்திதான் எனது அடுத்த இலக்கு, முதலில் ஜெயலலிதா பற்றியே பரிசீலித்தேன், இப்போது ராகுல், சோனியாவை கிறிஸ்த்மஸ் தினத்திற்குள் உள்ளே தள்ள முயற்சிகள் மேற்கொள்வேன்” என்றார்.
ஜெயலலிதாவுக்கு அடுத்து கிறிஸ்த்மஸ் தினத்திற்குள் சோனியா, ராகுல் சிறை நிச்சயம் : சுப்பிரமணியன் சுவாமி Reviewed by NEWMANNAR on September 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.