அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் A-32 நெடுங்சாலை வெள்ளாங்குளம் பகுதியில் குடிகாரர்களின் அட்டகாசம்

மன்னார் யாழ்ப்பாண பிரதான நெடுங்சாலை A-32 வீதியில் பயணிக்கும் பயணிகள் பலர் இரவுநேரத்தில் குடிகாரர்களின் தொல்லையால் பயணத்தை தொடரமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகுவதாக  பாதிக்கபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக வெள்ளாங்குளம் தேவன்பிட்டி பாலியாறு போன்ற பிரதேசத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இரவு 10மணிக்கு பிறகு நடுறோட்டில் வைத்து இளையோர்கள் சிலர் மது அருந்திவிட்டு கும்மாளம் போடுவதும் வாகனங்களை இடைமறித்து தீயவார்த்தைகளால் பேசுவதுமாக உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள்கள் இலுப்பைக்கடவை பொலிஸில்  முறைப்பாடும் கொடுத்துள்ளனர். 

மேலும் நேற்று முன் தினம் யாழில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஆட்டோ மீதும் குடி போதையில் அட்டகாசம் செய்துள்ளனர்.இதன் போது பாதிக்கப்பட்டவர்கள் இக் குடிகாரக்கும்பலின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் (NP–VI  3675) பொலிசாரிடம் கொடுத்துள்ளனர் இந் நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் இதே கும்பல் வழிப்பறியிலும் ஈடுபடலாம் எனவே பொலிசார் இது சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்துமாறு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



மன்னாரில் A-32 நெடுங்சாலை வெள்ளாங்குளம் பகுதியில் குடிகாரர்களின் அட்டகாசம் Reviewed by NEWMANNAR on September 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.