மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தில் பொன்னிச்சம்பா அரிசி பதுக்கி வைத்து மொத்த வியாபரிகளுக்கு விற்பனை
மன்னாரில் அமைந்துள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தில் மலிவு விலையில் விற்கப்பட வேண்டிய பொன்னிச்சம்பா அரிசி பதுக்கி வைக்கப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நுழைவாயிலில் 'லங்கா சதொச' விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களையும் பார்க்க இங்கு பொருட்கள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முடியும்.மன்னார் மக்கள் தமக்கு தேவையான பொருட்களை சில்லரையாகவும் மொத்தமாகவும் கொள்வனவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வராத்திற்கு மேலாக மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தில் மக்களுக்கு தேவையான அளவுக்கு சில்லரையாக விற்பனை செய்யப்பட்டு வந்த பொன்னிச்சம்பா அரிசி தற்போது பதுக்கி வைக்கப்பட்டு வர்த்தகர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் பல மூடை அரிசிகளை கொள்வனவு செய்து அதிகூடிய விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு கிலோ பொன்னிச்சம்பா அரிசி 'சதொச' விற்பனை நிலையத்தில் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் குறித்த அரிசி வெளியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ பொன்னிச்சம்பா 85 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
நேற்று முந்தினம் சுமார் 400 மூடைகள் பொன்னிச்சம்பா மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போதும் குறித்த அரிசி மக்களுக்கு வழங்கப்படாது மொத்தமாக வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தில் பொன்னிச்சம்பா அரிசி பதுக்கி வைத்து மொத்த வியாபரிகளுக்கு விற்பனை
Reviewed by NEWMANNAR
on
December 11, 2014
Rating:
No comments:
Post a Comment