மலாலாவின் இரத்தக்கறை படிந்த ஆடை முதல் தடவையாக காட்சிக்கு வைப்பு
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் தனக்குரிய சமதானத்துக்கான நோபல் பரிசை பெறுவதையொட்டி அவர் தலிபான்களால் சுடப்பட்டபோது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த ஆடை முதல் தடவையாக பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாடசாலை பஸ்ஸொன்றில் அமர்ந்திருந்த வேளை முகமூடி அணிந்து வந்த தலிபான் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மலாலா படுகாயமடைந்தார்.
அவரது தலையை துளைத்துச் சென்ற துப்பாக்கி ரவையானது கழுத்தினூடாக அவர் தோள் எலும்புக்கு மேலுள்ள தசை வரை ஊடுருவியிருந்தது.
இதனையடுத்து அவரது உயிரைக் காப்பாற்ற பிரித்தானியாவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது மலாலா அணிந்திருந்த ஆடை நோர்வேயிலுள்ள நோபல் சமாதான நிலையத்தில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மலாலாவின் இரத்தக்கறை படிந்த ஆடை முதல் தடவையாக காட்சிக்கு வைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:

No comments:
Post a Comment