மனித உரிமைகள் நாள் --- மார்கழி 10
மனித  குடும்பத்தினுள் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் பிறப்பில் சமமாகவே பிறக்கின்றது. அது பிறப்பின் போதே சில அடிப்படை உரிமைகளுடனேயே பிறக்கின்றது. அந்த சில அடிப்படை உரிமைகளே இன்றைய நவீன சிந்தனை வாதம் மனித உரிமைகள் என்கின்றது. மனித உரிமைகள் எவை என கேள்வி எழுப்பினால் பலர் பலவாறான விளக்கங்களை கூறக்கூடும். அவ்விளக்கங்கள் அம்மனிதர்களின் வாழ் சூழ்நிலையை கருத்திற்கொண்டு கூறப்பட்டாபகும். உண்மையில் இன்று வரை மனித உரிமைகள் என்றால் என்ன  என்பதற்கு ஓர் திடமான வரைவிலக்கணம் ஒன்று இல்லை. தொகுக்கப்பட்ட விளக்கங்களிலிருந்து நாம் பின்வரும் ஓர் முடிவிற்கு வரக்கூடியதாக இருக்கும்.
மனித உரிமைகள் எனப்படுவது ஓர் உயிரி மனித குடும்பத்தில் ஓர் அங்கமாக இருப்பதால்  அவ்வுயிரிக்கு உரித்தான உரிமைகள் ஆகும்.
எழுத்து ரீதியான முதல் மனித உரிமை பிரகடனம் கி.மு 539 ஆம் ஆண்டில் சீயஸ் உருளை மூலம் உலகிற்கு வழங்கப்பட்டது. அது புராதன ஆட்சிப்பீடமாகிய பேர்சிய மன்னன் சைரசால் அக்காடியன் மொழியில் கூட்ட களிமண்ணணைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இன்று வரை மனித நாகரீகத்தின் முதல் மனித உரிமைகள் பிரகடனமாக திகழ்கின்றது. குறிப்பாக இம்மன்னன் தனது அடிமைகள் அனைவரும் தாம் விரும்பிய சமயத்தை பின்பற்ற அனுமதி அளித்ததோடு அனைவரும் சமமானவர்கள் எனும் சமத்துவ கோட்பாட்டையும் முன்வைத்தான்.
நவீன உலகின் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்கப்பட்ட 1948ஆம் ஆண்டின் அனைத்துலக மனித உரிமைகள் பட்டயம் (ருniஎநசளயட னநஉடயசயவழைn ழக ர்ரஅயn சுiபாவள) அதன் பல உறுப்புரைகளில் சீயஸின் உருளையில் காணப்படுகின்ற வாசகங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இதை விடுத்து சர்வதேச மனித உரிமைச்சட்டம் இன்று சர்வதேச சட்டப்பரப்பில் முன்னுரிமை பெற்று வருகின்றது. அதனுள் பல்வேறு மனித உரிமைச் சட்ட உபகரணங்கள்இ அமுலாக்கற் படி முறைகள்இ மேற்பார்வைக்குழுக்கள் மற்றும் நீதியியல் விசாரணை படிமுறைகள் என்பன உள்ளடங்கும். 
சர்வதேசத்தோடு ஒத்துப் போவதற்காக தனி நாடுகளும் தமது ஆட்சிப்பரப்பினுள் சட்டங்களையும்இ அமுலாக்கற் பொறி முறைகளையும்  ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக இலங்கையை நோக்கின் அரசியல் அமைப்பின் பகுதி மூன்றினுாடாக அடிப்படை உரிமைகள் எனும் தலைப்பின் கீழ் சில மனித உரிமைகளை நாட்டு மக்கட்கு வழங்கியுள்ளதுடன் அவை மீறப்படின் நீதிமன்றம் மூலம் நிவாரணங்களையும் பெற முடியும்.அடுத்தாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. இதன் வாயிலாக அக்குழு மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணைகளை நடாத்தவும் மீறல்களை நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவும் தத்துவார்த்தம் கொண்டுள்ளது. 
இவ்வாறான மனித உரிமை முன்னெடுப்புக்கள் இருப்பினும் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் அமுலுக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் கூட அது இன்னமும் முழுமையாக அமுல்படுத்தபடவில்லை என்பதே உண்மை. இது அபிவிருத்தி அடைந்த நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று அனைத்திற்குமே பொதுவான ஓர் உண்மையாகும். 
அண்மையாக ஐக்கிய அமெரிக்காவில்  ஓர் கறுப்பின இளைஞர் வெள்ளையின் பொலிஸ் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் மீதான நீதி விசாரணையின் போது ஒன்பது யூரர்களில் ஆறு யூரர்கள் வெள்ளையினத்தவர்கள். அச்சபை பொலிஸ் மீது குற்றம் இல்லை என தீர்ப்பளித்தது. இதன் கவனிக்க வேண்டிய விடயம் அம்மாநிலம் 84மூ கறுப்பர்களை கொண்டது. எனவே யூரர்களின் எண்ணிக்கையும் அந்த விகிதாசாரப்படியே நிர்ணயிக்கப்பட வேண்டும். அதை விடும்மு அமெரிக்கப்படைகளால் குவாத்தமாலா வில் எந்த விதமான விசாரணைகளுமின்றி தீவிரவாதிகள் என பெயர் குத்தப்பட்டு பலர் சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள்.கொங்கோவில் அரச படைகள் ஜனநாயக வாதிகட்கு எதிராக சித்திரதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகளை நடாத்துகின்றன. வட உகண்டாவில் 1.6 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் உள்நாட்டு இடப்பெயர்வுகட்கு உட்பட்டு வருகின்றார்கள்.அல்கேரியாவில் அடைக்கலம் எதிர்பார்க்கும் அண்டை நாட்டவர்கள் மிக மோசமாக நடாத்தப்படுகின்றார்கள். 
கஜகஸ்தானில் சிறுபான்மைக்கு எதிரானவர்களின் சொத்துக்கள் சட்டம் என்ற பெயரில் சூறையாடப்படுகின்றன. சீனா தொடர்ந்தும் ஊடகங்களின் குரலை நசுக்கி வருகின்றதுஇ அது கொங்கொங் நாட்டினரின் அடிப்படை உரிமையான ஜனநாயகத்திற்கான உரிமையும் தொடர்ந்து மறுதலித்து வருகின்றது. 
இது போன்ற சம்பவ எடுத்துக்காட்டுகள் மிக பழமையான எண்ணக்கருவாகிய மனித உரிமைகள் இன்று வரை அதன் பயண முடிவை அடையவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுக்கள் ஆகும். இது ஓர் அரசால் அரங்கேற்றப்படும் மனித உரிமை மீறல்களாகும். ஆனால் இன்று காப்பரேட்டுக்களும் தனிமனிதர்களும் மனித உரிமை மீறல்களை புரிகின்றனர். அதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசாங்கங்களும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. இது தொடர்பில் தனிமனிதர்களின் கவனமெடுப்பு மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். 
மாற்றம் தனிமனிதர்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். எனது சுகந்திரம் கையை எப்படி விசுக்குவதிலும் உள்ளது ஆனால் அது மற்றவரின் மூக்கு நுனியை தொடக்கூடாது. மற்றவர்களும் தன்னைப்போன்ற ஓர் படைப்பே என ஓவ்வொரு தனிமனிதனும் சிந்திக்க வேண்டும். அச்சிந்தனை அரசாங்கங்களின் ஆட்சிப்பீடத்தை ஆட்டங்காண வைக்கும் என்பது நடைமுறை நிதர்சனம். இதற்கு உதாரணமாக பல சர்வதிகாரிகளின் முடிவுகளுடன் அண்மைய நேபான வரலாறும் வழிகாட்டியாகவுள்ளது. ஏனெனில் அரசாங்கம் என்பது அரசை இயக்கும் ஒரு நடைமுறை. அந்நடைமுறை ஒவ்வொரு தனிமனிதனின் விட்டுக்கொடுப்புக்களின்  மீதே தனது அதிகாரத்தை பெறுகின்றது. எனவே அத்தனி மனிதர்களின் ஒட்டு மொத்த அறிவின் எதிர்பார்ப்பே அரசாங்கமாக அமைகின்றது. எனவே தனிமனிதர்களின் மனித உரிமை தொடர்பான மாற்றம் அரசுகளின் மாற்றத்திற்கு காரணமாக அமையும்.
அம்மாற்றம் இம்மனித உரிமை தினத்திலிருந்து ஆரம்பிக்கட்டும். அது எமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கபடக்கூடும். 
அ .அர்ஜுன்
L.L.B(Hons)
L.L.B(Hons)
மனித உரிமைகள் நாள் --- மார்கழி 10
 Reviewed by NEWMANNAR
        on 
        
December 10, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 10, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
December 10, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 10, 2014
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment